சூப்பர் ஸ்ட்ார் விஜயகாந்த், நாகர்கோவில் பகுதியில் படப்பிடிப்பில் இருந்தார். விஜயகாந்த் மரணம் குறித்த தகவல் அறிந்ததும் அவர் சென்னை புறப்பட்டார். இதற்காக தூத்துக்குடி விமான நி0ைலயம் வந்த நடிகர் ரஜினிகாந்த், கூறியதாவது: “விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். அன்பு நண்பரை இழந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அசாத்திய மன உறுதியுள்ள மனிதர். அவர் உடல்நலம் தேறி வந்துவிடுவார் என நம்பினோம்.
சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் சோர்வாக விஜயகாந்தை பார்த்ததும் வருந்தினேன். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். தமிழ்நாட்டு மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டனர்.” இவ்வாறு அவர் கூறினார்.