சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
Also Read – மேற்கு வங்காளத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருகிறார். இவர் அவரின் தந்தையை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், “கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் இருக்கும் கல்லூரிக்கு சென்றேன்.
அப்பொழுது எனது காரின் மற்றொரு சாவி பவுச்சுடன் காணாமல் போனது. அதனால் அதை தயவு செய்து கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, போயஸ்கார்டனில் வீட்டில் இருந்த லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.