சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென பெங்களூருவுக்கு வந்தார். அவர் காலை 11.30 மணியளவில் ஜெயநகரில் உள்ள பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பணிமனைக்கு வந்தார். அவரை கண்டதும் பி.எம்.டி.சி. ஊழியர்கள் ஆச்சரியமும், உற்சாகமும் அடைந்தனர். அவர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சிறிது நேரம் கலந்துரையாடினார்.! இந்நிலையில், முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று வருகை தந்தார். அப்போது ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயண ராவ் உடன் சேர்ந்து அங்குள்ள பெற்றோர் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபாடு செய்தார். ரஜினிகாந்த் தனது சொந்த ஊருக்கு வந்ததால் அந்த கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் சொந்த ஊருக்கு வந்த ரஜினிகாந்துக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.