நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள ’லால் சலாம்’ திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஜினி பிறந்த நாளான நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பாலபிஷேகம் அன்னதானம் என்ன செய்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாரிக்கப்படும் ’லால் சலாம்’ படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வீடியோவை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனையடுத்து திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினி நேற்று சாமி தரிசனம் செய்தார். மேலும் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்துகொண்டார்.