தமிழ்நாடு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ்தாஸ், ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் ராஜேஸ் தாசுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஸ்தாஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்து விழுப்புரம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.