ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை நேற்று முன்திம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்போது தேர்தல் தேதியை நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றி உள்ளனர். நவம்பர் 23ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் பல சமூக நிகழ்வுகள், திருமணங்கள் நடைபெற உள்ளதால் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
