ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை பொதுக்கூட்டம் ராஜஸ்தானில் நடந்தது. இதில் பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தானில் 2023 ஏப்ரல் முதல் காஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும். மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தில் வரும் ஏழை குடும்பத்தினருக்கு இந்த சலுகை அளிக்கப்படும். வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ராஜஸ்தானில் இப்போது காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அடுத்தாண்டு இங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் கெலாட்டின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ராஜஸ்தானில் இப்போது காஸ் சிலிண்டர் ரூ.1000க்கு மேல் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.