Skip to content
Home » உண்ணாவிரத போராட்டம் அறிவித்து ராஜஸ்தான் அரசுக்கு தலைவலி கொடுக்கும் சச்சின் பைலட்..

உண்ணாவிரத போராட்டம் அறிவித்து ராஜஸ்தான் அரசுக்கு தலைவலி கொடுக்கும் சச்சின் பைலட்..

முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிற ராஜஸ்தான் மாநிலத்தில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே எப்போதும் கருத்து வேறுபாடுதான் . இவர்களிடையே அவ்வப்போது மோதல் எழுவதும், அதில் மேலிடம் தலையிட்டு சமரசம் செய்வதும் தொடர்கதையாய் நீளுகிறது. தற்போது சச்சின் பைலட் கையில் எடுத்துள்ள போராட்டத்ததால் அசோக் கெலாட் அரசுக்க பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.  முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் மீது தற்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இதுபற்றி ஜெய்ப்பூரில் நேற்று தனது இல்லத்தில்  அவர் பேட்டி அளித்தார். அப்போது.. முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா அரசின் ஊழல் தொடர்பாக தற்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தோம். உண்ணாவிரதப்போராட்டம் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள்தான் உள்ளன. ஏதோ சதி இருப்பதாக எதிரிகள் மாயையை பரப்பக்கூடும். எனவே இதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லை என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வார்கள். எனது கோரிக்கையை வலியுறுத்தி, நான் ஜெய்ப்பூரில் ஷாகீத் ஸ்மாரக்கில் 11-ந் தேதி (நாளை) ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகிறேன் என்று அவர் கூறினார். இந்த 11-ந் தேதி அசோக் கெலாட்டின் சைனி சமூகத்தைச் சேர்ந்த மகாத்மா ஜோதிர்பா பூலே பிறந்த நாள் ஆகும். சச்சின் பைலட் கோரிக்கைக்கு, அசோக் கெலாட் மந்திரிசபையில் உணவுத் துறை மந்திரி பிரதாப் சிங் காச்சாரியாவாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *