ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த இரட்டையர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங் வெவ்வேறு மாநிலங்களில் 900 கிமீ தொலைவில் வசித்து வந்தனர். அவர்கள் வினோதமான சூழ்நிலைகளில் ஒரே நாளில் இருவரும் சில மணிநேர இடைவெளியில் இறந்தனர். ஒருவர் குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து இறந்தார். இன்னொருவர் ஜெய்ப்பூரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். சகோதரர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங் இருவரின் உடலும் அவர்களது சொந்த கிராமமான சார்னோ காதலாவில் தகனம் செய்யப்பட்டது.