இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழா கடந்த ஒரு வாரமாகவே நடந்து வருகிறது. ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியை தூவி விளையாடுவது இந்த பண்டிகையின் ஒரு அம்சம்.
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ். அங்குள்ள நூலகத்தில் படித்துகொண்டிருந்தார். ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைந்துள்ளனர். ஆனால் வண்ணம் பூசிக்கொள்ள ஹன்ஸ்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் ஹன்ஸ்ராஜை கடுமையாக தாக்கினர்.
இதன் உச்சமாக மூவரும் சேர்ந்து ஹன்ஸ்ராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். நூலகத்திற்குள் 15க்கும் மேற்பட்டவர்கள் முன்னிலையில் இந்த கொடூரம் நடந்தது.பின்னர் மூவரும் தப்பியோடிய நிலையில் ஹன்ஸ்ராஜ் உடலுடன் குடும்பத்தினர் மற்றும் கிராம மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூவரையும் கைது செய்ய வேண்டும் என நெடுஞ்சாலையில் உடலை கிடத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசாரின் உறுதிமொழியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.