தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் உப்புகாரன் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியே தினந் தோறும் பொதுமக்கள் , விவசாயிகள்,மாணவ, மாணவிகள்,கடந்துச் செல்கிறனர். இந்த ரயில்வே கேட்டில் கேட் கீப்பர் இல்லாததால் கேட் பூட்டிய நிலையில் உள்ளது. இந்த ரயில்வே கேட் அருகில் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாய, அறுவடை பணிகளுக்கு இயந்திரங்கள், இடுபொருள்கள் எடுத்துச் செல்வதில் விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் ஆம்புலன்சால் அங்குச் செல்ல முடியாது. கேட்டை தாண்டியுள்ள சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதிலும் சிரமம் உள்ளது. ரயில்வே நிர்வாகம் ராஜகிரி உப்புகாரன் ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பரை நியமிக்க அப் பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.