அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரியில் 55 மாணவ, மாணவிகள் குர்ஆன் துவக்கம் செய்யும் நிகழ்ச்சியும், 31 மாணவ, மாணவிகள் குர்ஆன் நிறைவு செய்யும் நிகழ்ச்சியும் நடைப் பெற்றன. நிகழ்ச்சிக்கு மலேசியா டத்தோ வீரா சாகுல் ஹமீது தாவூது ஷாபி தலைமை வகித்தார். முகம்மது நாசர், முகம்மது கஜ்ஜாலி, முகம்மது ரபீக் முன்னிலை வகித்தனர். ஹஜரத் சாகுல் ஹமீது மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். முன்னதாக முகம்மது அனீஸ் வரவேற்றார். இதில் யூசுப் அலி, முகம்மது பாரூக், முகம்மது சுல்தான், முல்லா பாரூக், ரவூப், வெல்பேர் தலைவர் காசிம், ஹபீப் முகம்மது, சபீர் அகமது, மாலிக், சப்ரினா, சுகைனா, தில்சாத், கல்வி மைய ஆசிரிய மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டன்ர்.