திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் அடுத்த வேலூர் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆ. ராசா எம்.பி, போக்குவரத்துத் துறை அமைச்சர்
சா.சி.சிவசங்கர், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகர் (திருவையாறு), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்),
(சாக்கோட்டை அன்பழகன் (கும்பகோணம்), எம்.பிரபாகரன்(பெரம்பலூர்), கா.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்), கு.சின்னப்பா(அரியலூர்),
மாவட்ட கழக செயலாளர்கள் குன்னம் சி. ராஜேந்திரன்,
ராசாவின் மகள் மயூரிஇராசா, ஆ.ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள், ஆ.சிவசண்முகம்,
வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகை சிவசண்முகம்,
பெரம்பலூர்அரசு வழக்கறிஞர் சந்தானலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம்,
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யமளாதேவி,
மாநிலங்களை உறுப்பினர் ஏ.எம்.அப்துல்லா,
கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, கழக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மற்றும் நீலகிரி மக்களவை தொகுதி திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.