திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் திண்டுக்கல் பிரியாணி என்கிற பெயரில் சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளை ஆக்கிரமித்து நடத்தப்பட்டும் பிரியாணி கடை குறித்தும் etamilnews.com ல் பல முறை செய்தி வெளியிட்டு வந்தோம். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனின் வாசலில் உள்ள திண்டுக்கல் பிரியாணி கடைகள் ரயில்வேக்கு சொந்தமான இடத்திலேயோ, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலேயோ இல்லை என்றும் அந்த கடைகள் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு என etamilnews செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் சில அதிகாரிகள் திண்டுக்கல் பிரியாணி கடையினருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டி வந்தனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிடம் கேட்டதற்கு திண்டுக்கல் பிரியாணி நடத்தப்படும் கடைகள் அனைத்தும் பர்மா அகதிகளுக்கு வழங்கப்பட்டவை என்றும் காலப்போக்கில் பர்மா அகதிகளின் வாரிசு தாரர்களிடம் இந்த கடைகளை உள்வாடகைக்கு வாங்கிய நபர்கள் ஆக்கிரமித்து பிரியாணி கடை நடத்தி வருவதாக கூறினர். அப்படி என்றாலும் ரயில்வே ஜங்ஷன் ரோட்டை ஆக்ரமித்துஎப்படி பிரியாணி கடையை நடத்த அனுமதிக்க முடியும் என கேட்டதற்கு இந்தவிவகாரத்தில் போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவந்தனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னர் ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் உள்ள திண்டுக்கல் பிரியாணி கடைகளின் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்பகளை வரும் 18ம் தேதி காலை 9 மணிக்குள் அகற்றிவிட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை பிரியாணி கடை உரிமையாளருக்கு நோட்டடீஸ் வழங்கியிருந்தது. இதன் எதிரொலியாக இன்று காலை ரயில்வே திண்டுக்கல் பிரியாணி கடைகளின் முன்புறம் உள்ள சாமியான பந்தல் உள்ளிட்ட ஆக்கிரமிப்பகள் அகற்றப்பட்டு விட்டன. தற்போது பர்மா அகதிகளுக்கு என ஒதுக்கப்பட்ட கடைகளில் உள் வாடகையாக சுமார் 30 வருடகாலமாக திண்டுக்கல் பிரியாணி கடைகள் இயங்கி வருவது எப்படி? இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளால் இதுவரை இருப்பது என்கிற கேள்வி எழுந்தள்ளது.