மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் நல்லூர் கிராமத்தில்; மழைநீரில் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளிடம்கோரிக்கைகளை கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் பாரதி ., அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். இந்தாண்டு பயிர் காப்பீடு செய்ய சுமார் 68 ஆயிரம் ஹெக்டேருக்கு சுமார் 52 ஆயிரம் ஹெக்டேருக்குத்தான பயிர் காப்பீடு விவசாயிகள் செய்துள்ளனர். பயிர் காப்பீடு செய்ய இந்த மாதம் 22 ந்தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் பெற்றுத்தந்துள்ளார்கள். எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகள் பாதிக்காத வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு செயல்பட்டுவருகிறது என மாண்புமிகு சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் திட்ட இயக்குநர் திருமதி.ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு.வே.சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.உ.அர்ச்சனா, கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் திரு.ஜெயப்பிரகா~; மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.