வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும் நேற்று இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையில் மழையும் இல்லை, வெயிலும் இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
திருச்சியில் நேற்று மாலை, இரவு நேரங்களில் மழை பெய்தது. காலை 9 மணிக்கு வெயில் தென்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.