தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எந்த மழை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மழை வெள்ளத்தை அரசியலாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. மக்கள் பாராட்டும்படி எங்கள் செயல்கள் இருந்தன. மக்கள் பணிகளை நாங்கள் செய்கிறோம். இதை தாங்கி கொள்ள முடியாமல் அரசியல் ஆக்குகிறார்கள். எதிர்மறையான வீண் விமர்சனம் செய்வோருக்கு பதில் அளிக்க தேவையில்லை. மாநகராட்சி அதிகரிகளுக்கு மட்டுமல்ல, மழை வெள்ளத்தில் பணியாற்றிய அத்தனை ஊழியர்களின் பணியையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினாா. அதைத்தொடர்ந்து தூய்மைபணியாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.