தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மிக கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பேருந்தில் சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து,பொதுமக்கள் சந்தித்து
அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும் அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க படகுகளை ஏற்பாடு செய்து வெள்ளப்பாதிப்புகளில் சிக்கிய மக்களை மீட்டு வருகிறார். இந்த மீட்பு பணியில் களத்தில் இறங்கி தனது தொகுதி மக்களை பாதுகாப்பாக காப்பாற்றி வருகிறார். அப்பகுதி மக்கள் எம்பி கனிமொழிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.