மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கீட செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்தும் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்;-
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை பெய்த கனமழையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதை அடுத்து அகற்றும் பணிகளையும், 45.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுமான பணிகளையும் மகாதானபுரம் கிராமத்தில் நூறுஆண்டுகள் பழமையான மரம் மழையால் வேரோட சாய்ந்து வாய்க்காலில் விழுந்துள்ளதையும் அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக 14 செ.மீ. மழை பாதிவாகியுள்ளது. மழைபாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 4 புயல்பாதுகாப்பு மையங்கள் உட்பட 362 இடங்களில் முகாம்கள் அமைப்பது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் உள்ளது. கடந்த பெஞ்சல் புயல் பாதிப்பின்போது பெய்த கனமழையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சேதமடைந்த 362 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. மழையால் சாய்ந்த மரங்கள் அங்கற்றப்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. கடந்த மழையில் மாவட்டத்தில் 831 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்து தமிழக முதல்வரின் கவனத்திற்குகொண்டு சென்று நிவாரணம் வழங்கப்படும். அரசு ஆஸ்பத்திரியில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டள்ளது. 45.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளோம். பணிகள் முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். மாணிக்கப்பங்கு, சின்னங்குடி பகுதியில் கடல் அறிப்பை தடுப்பதற்கான பணிகள் செய்ய நிதிஒதுக்கீடு செய்ய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். கடற்கரையோர கிராமங்களில் கடல் அறிப்பை தடுக்க நிதிஒதுக்கீடு செய்வதற்கும், கடல் நீர் உட்புகாமல் இருப்பதற்கு மாவட்டத்தில் 4 இடங்களில் 94 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டதலைமை ஆஸ்பத்திரியில் தேவையான டாக்டர்கள் நியமனம் செய்வதற்கு சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். பெருமாள்பேட்டை உட்பட மழைநீர் தேங்கிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பழையார், புதுப்பட்டினம் கிராமங்களில் மழைநீர் தேங்கியுள்ளதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வுகான்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். உடன் கலெக்டர் மகாபாரதி, எம்.எல்.ஏ.நிவேதாமுருகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.