தமிழகம் முழுவதும் பரவலாக்க பெய்து வரும் மழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் மழை மற்றும் கழிவு நீராலும் விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அந்த வகையில் கரூர் மாவட்டம் தளவா பாளையம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் கோரை புல் விவசாயம் செய்துள்ளனர்.
கோரைபுல் விவசாயம் மழை இல்லாத நேரத்திலும் நன்கு வளரும் தன்மை கொண்டதால் இதனை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கோரைப்புல் மூலம் பாய்கள் வீட்டு அலங்கார பொருட்கள் கூடைகள் இருக்கைகள் ஆகியவை தயார் செய்யப்படுகின்றனர். மழை காரணமாகவும் அருகில் உள்ள புகலூர் சர்க்கரை ஆலை மற்றும் டிஎன்பிஎல் காகித ஆலையில் இருந்து விளை நிலங்களில் கழிவுநீர் அதிக கலப்பதாலும் கோரை புல் அழகி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோரைப்புல் விவசாயி மலையப்பன் கூறுகையில்…. தளவாபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் கோரை புல் விவசாயம் செய்து வருகின்றனர் ஐந்து ஏக்கர் கோரை புல் விவசாயம் செய்து வருகிறேன். இங்கு 10 வருடங்களுக்கு முன்பாக வாழை விவசாயம் செய்து வந்ததாகவும் கழிவுநீர் அதிகம் கலப்பதால் வாழைகள் பயிரிட முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கோரைப்புல் விவசாயம் இப்போது செய்து வருவதால் புகலூர் சர்க்கரை ஆலை மற்றும் tnpl காகித ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய நிலங்களுக்குள் முழங்கால் அளவிற்கு தண்ணீர் புகுந்ததால் பல ஏக்கர் கோரை புல் அழுகிவிட்டதாகவும், தமிழக முதல்வர் விவசாயம் முன்னேற வேண்டும் என்று சொல்கின்றார். ஆனால் இதுபோல செய்திகள் இவரிடம் செல்கிறதா என்பது தெரியவில்லை. எனவே உடனடியாக தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.