தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது அரையிறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 14 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 44 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. 3.30 மணி அளவில் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் 3.55 மணிக்கு ஆட்டத்தை தொடங்க முடிவு செய்தனர். அதன்படி போட்டி தொடங்கியது. க்ளாசன், மில்லர் தலா 11 ரன்களுடன் களத்தில் நிதிதானமாக ஆடினர். 16 ஓவர் முடிவில், தென் ஆப்ரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்து திணறிக்கொண்டிருந்தது.
வங்க கடலில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் கொலக்த்தாவில் மேலும் மழை வர வாய்ப்பு உள்ளது. இன்று போட்டி நடத்த முடியாத அளவுக்கு மழை கொட்டினால் போட்டி நாளை நடைபெறும். தென் ஆப்ரிக்கா 14 ஓவர், 4 விக்கெட் என்ற இடத்தில் இருந்து போட்டியை தொடங்க வேண்டும். நாளையும் போட்டி நடத்த முடியாத அளவுக்கு மழை பெய்தால் லீக் புள்ளிப்பட்டியல் அடிப்படையில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எனவே இந்த அரையிறுதி போட்டியில் மழையின் ஆட்டமும் முக்கிய பங்கு வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.