அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக இரவில் குளிரும் பகலில் கடுமையான வெயிலும் நிலவியதால், பொதுமக்கள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை குளிர்ந்த சீதோசனநிலை நிலவியது. இதனை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, செந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் சாரல் கலந்த மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருகிறது. மழையின் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலை மற்றும் உளுந்து பயிரிட்டுள்ள விவசாயிகள் இம்மழை கடலை மற்றும் உளுந்து பயிருக்கு நல்ல ஊக்கம் தரும் என்பதால், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், இன்று சாரலுடன் கலந்த கோடைமழை தொடங்கியுள்ளதால், ஜெயங்கொண்டம், புதுக்குடி, இலையூர், வாரியங்காவல், குவாகம் உள்ளிட்ட சுற்றுவட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
