வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மறுநாள் அதிகாலை வரை மாமல்லபுரத்தில் கரை கடந்தது. இதன் காரணமாக தற்போது விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது. எனவே இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மோகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.