தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் நீர் வளத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக கண்காணிப்பில் இருக்கும் கிணறுகளின் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. இந்தாண்டு ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, கடந்த ஜூன் மாதத்தை காட்டிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்துார், மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூரில் 0.79 மீட்டர், நாமக்கல்லில் 0.69 மீட்டர், திருவள்ளூரில் 0.61 மீட்டர் அதிகரித்துள்ளது. அதேபோல் தர்மபுரி, கடலுார், தஞ்சாவூர், நாகை, பெரம்பலுார், அரியலுார், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் என 16 மாவட்டங்களில் நிலத்தடி நீர் சரிந்துள்ளது. அதிகபட்சமாக, திருநெல்வேலியில், 0.71 மீட்டர், துாத்துக்குடி, பெரம்பலுார், தர்மபுரி மாவட்டங்களில் தலா 0.50 மீட்டரும், நீர் மட்டம் சரிந்துள்ளது.
