தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பள்ளப்பட்டி நகராட்சி 4வது வார்டு பகுதியில் தூய்மை பணியாளர் ஒருவர் சாரல் மலையிலும் தூய்மை பணி செய்து வருகின்றனர்.
கொட்டும் மழையிலும் தூய்மை பணியாளர் நகராட்சி பகுதியில் இந்த குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இதில் மழையில் நனையாமல் இருப்பதற்காக ரெயின் கோட் கூட இல்லாமல் தூய்மை பணி செய்து வருவதை ஒருவர் கேட்ட பொழுது நகராட்சி சார்பில் நாளை கவச உடை வாங்கித் தருவதாக கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு கவச உடை வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.