வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இன்று அது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிகிறது. இதனால் சென்னையில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல மயிலாடுதுறை மாவட்டத்திலும் இன்று காலை பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநில பேரிடர் மீட்பு படை வந்துள்ளது.
