தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானதை பார்க்க முடிந்தது. இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும் , நாளையும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி லேசானது முதல் மிதமான மழை என தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது…
