சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களிலும், நாளை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யவாய்ப்புள்ளது. அதே சமயம் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.