அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் திருச்சியில் இன்று மதியம் முதல் மேகமூட்டததுடன் வானம் காணப்பட்டது.

இதனிடையே திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே குமரகுடி கிராமத்தில் இன்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. நீண்ட காலத்திற்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்தது பார்த்ததும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..