Skip to content
Home » 2 தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்? ரயில்வே தொழிற்சங்க தேர்தல் முடிவுகள்

2 தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்? ரயில்வே தொழிற்சங்க தேர்தல் முடிவுகள்

  • by Authour

தென்னக ரயில்வேயில்  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல்  கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில்  நடந்தது.   எஸ்.ஆர். எம்.யூ உள்பட 5 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன.

சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு என அனைத்து  கோட்ட தலைநகரங்களிலும், பொன்மலை ரயில்வே பணிமனையிலும், ஜங்ஷன் ரயில் நிலையத்திலும்  இதற்கான வாக்குப்பதிவு  நடந்தது.   பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று அனைத்து கோட்ட தலைநகரங்களிலும்  நடந்து வருகிறது.. திருச்சியில் ரயில்வே திருமண மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

மொத்தம் உள்ள 76 ஆயிரம் வாக்காளர்களில் 88% பேர் வாக்களித்தனர். இதில் 30 சதவீதம் வாக்குகள் பெற்ற தொழிற்சங்கம் மட்டும் தான் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும்.  15 % வாக்குகள் பெற்றால் கேட் மீட்டிங் நடத்தவும், அங்கு தொழிற்சங்க போர்டு வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படும்.

இந்த தேர்தலில்   எஸ்.ஆர்.எம்.யூ. , டி ஆர் இ யூ ஆகிய 2 தொழிற்சங்கங்கள்  30 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பெறும் நிலையில் உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
Trichy All round completed
SRMU – 3499 ( 43%)
DREU – 3017 ( 37%)
SRES – 1277 (15%)
DRKS – 276 (3%)
RMU – 13 (0.16%)
Invalid – 42

Total – 8110
Golden Rock
DREU – 1843
SRMU – 1367
SRES – 410
RMU – 4
DRKS – 48
INVALID – 10
TOTAL – 3682

=====
MDU Final
SRMU-4349
DREU-2046
SRES-671
DRKS-393
RMU-5
Inv-16

Salem (All Rounds Counting Completed).

Total Polled Votes = 7533

SRES – 2818
SRMU – 2371
DREU – 1951
DRKS – 214
RMU – 7
Invalid – 172

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *