மும்பை “கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு 2-ந் தேதி விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயில் கோழிக்கோட்டை கடந்து கோரப்புழா பாலம் அருகே வந்தபோது, டி-1 பெட்டியில் இருந்த ஒருவர் திடீரென பையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து சக பயணிகள் மீது ஊற்றினார். இதில் 3 பேர் பலியானார்கள். 9 பேர் காயமடைந்தனர்.
ஓடும் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர் யார்? எதற்காக ரெயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்?, அவர் மாவோயிஸ்டு அல்லது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக வடமாநில தொழிலாளியை பிடித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட்ட நிலையில், குற்றவாளியின் மாதிரி வரைபடத்தையும் வெளியிட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் ரத்தினகிரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது ஷாருக் ஷபி சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். ஷாருக் ஷபியை கைது செய்த மராட்டிய தீவிரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.