தென்னக ரெயில்வே வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் வாஸ்கோடகாமா – வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் இரண்டு நாட்களுக்கு இரு மார்க்கத்திலும் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. வாஸ்கோடகாமாவில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் 12 மற்றும் 19ம் தேதி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இதே போல மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55க்கு புறப்படும் ரயில்கள் 13 மற்றும் 20ம் தேதி முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மார்க்கத்தில் என்ஜினீயரிங் பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக செய்தி குறிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.