Skip to content

வட மாநிலங்களில் கன மழை… 406 பயணிகள் ரயில்கள் ரத்து…

  • by Authour

காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வட மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கடந்த ஜுலை 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை சுமார் 300 சரக்கு ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 406 பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 600 சரக்கு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 500 பயணிகள் ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!