பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பேசியதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி.க்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மண்ணச்சநல்லூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மண்ணச்சநல்லூரில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்தும், வாயில் கருப்பு துணி கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி வடக்கு மாவட்ட காங்., கமிட்டி தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், மகிளா காங்கிரஸ் மோகாம்பாள், வட்டார தலைவர் ரவிசங்கர், ஞானகுரு, அருணாசலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.