இயற்கை சூழலில் திருமணம் செய்து கொள்வது லேட்டஸ்ட் டிரெண்டாகி வரும் நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் -ஜாக்கி ஜோடியும் இதே முறையை தங்களது திருமண வைபவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, ‘அயலான்’ போன்றப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து, இன்று கரம் பிடித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஜோடி தங்களது காதலை அறிவித்த நிலையில், இன்று காலை கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இரு குடும்பத்தாரின் உறவினர்கள், திரையுலக பிரபலங்களும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமண கொண்டாட்டங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ள இந்த காதல் தம்பதியர், கொண்டாட்டத்திற்குப் பதிலாக மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வாழ்த்த வந்திருந்தவர்களுக்கும் செடிகள், விதைகள் போன்றவற்றை வழங்கி உள்ளனர். நடிகை ரகுல்- ஜாக்கி ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.