நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் இந்தியாவின் கடும் உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தின் இன்றைய நிலை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டில்லியில் சலூன் ஒன்றில் தாடியை டிரிம் செய்து கொள்ள சென்ற ராகுல் காந்தி முடி திருத்துபவருடன் உரையாடிய விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்போது பேசிய சலூன் கடைக்காரர் அஜித், நாள் முழுவதும் உழைத்தாலும் நாளின் முடிவில் சேமிக்கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை என்று ராகுலிடம் வருத்தத்துடன் கூறினார். இது குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அஜித் கூறிய எதுவும் மிச்சமில்லை என்ற வார்த்தைகளும் அவரது கண்ணீரும் தான் இன்றிய இந்தியாவின் கடினமாக உழைக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நிலை என்று குறிப்பிட்டுள்ளார்.