திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் இன்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் நிருபர்களை சந்தித்து பேசினார் :-
அம்பானி குடும்பத்தினர் 260வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது எப்படி என கேள்வி எழுப்பி, மோடியுடன் எங்கு சென்றார் எத்தனை ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டது. அதன் குடும்பத்தில் நிதி உதவிக்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எல்ஐசி போன்ற பொதுமக்களுடைய வரிப்பணம் எவ்வளவு தரப்பட்டுள்ளது என்ற கேள்விகள் கேட்டார்.
இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல முடியவில்லை பிரதமரோ, நிதி அமைச்சர் யாரும் பதில் சொல்லவில்லை.
இதனால் பாராளுமன்றத்தில் முடக்கினார். பாராளுமன்ற வரலாற்றில் பிஜேபி அமைச்சர்களே நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதுமே முடக்கி எந்த விவாதம் நடத்தப்படவில்லை.
அவர்கள் அதை சாதகமாக விவாதமின்றி காரியங்கள் நிறைவேற்றி கொண்டார்கள். (JPC) ஜாயின்ட் பார்லிமென்ட்ரி கமிட்டி வேண்டும் என்று எதிர் கட்சிகளும் கேட்டனர். இதில் பிஜேபி கட்சியினரும் பிஜேபி கட்சி தான் தலைவராக இருப்பார்.
உண்மை வெளிவரும் என்ற காரணத்தால் JPC போட பிஜேபி பயப்படுகிறது.
ராகுல் காந்தி இந்தியாவுக்கு விரோதமாக பேசினார்கள் என்று சொல்லியும், எடுபடாததினால் இரண்டு வருடத்திற்கு முன்பாக தேர்தலில் பேசியதை எடுத்து அவருக்கு சாதகமான மாஜிஸ்ட்ரேட்டை போட்டனர். மேலும் வீட்டையையும் காலி செய்ய பேரும் நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள். அவருடைய ஜனநாயக கடமைக்கு எதிரான செயல்களில் ஏற்படுகிறது மட்டுமல்ல எதிர்க்கட்சியில் ஜனநாயகக் குறவளையை ஒடுக்குவதாக உள்ளது.
ராகுல் காந்தியின் பிரச்சனையில் சட்டப் பிரச்சனை சட்டரீதியாக சந்திப்போம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அரசியல் ரீதியாக சந்திப்போம். ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட ஜனநாயக படுகொலையை சட்ட எதிர நடவடிக்கை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாளை திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஈடுபடபோகிறது. போராட்டத்தில் காங்கிரசும் ஈடுபட உள்ளது.
15 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. 20ம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பாக இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதம் ஒன்றிய, மாவட்ட அளவில் நடைபெற உள்ளது. ஏழு ஆண்டுகளாக நிறைவேற்று இருந்த அரிஸ்டோ மேம்பாலம் தற்பொழுது நிறைவு பெற்றுள்ளது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
திருச்சியில் தொழில்நுட்ப பூங்கா வேண்டும் என முதலமைச்சரிடம் சென்ற ஆண்டு கோரிக்கை வைத்துள்ளோம்
நம்பிக்கை அதிகரிக்கும் வகையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 600 கோடியில் திருச்சியில் டைட்டல் பார்க் ஆரம்பிக்கப்பட உள்ளது.
பிரதமர் இந்தியா முழுவதும் போகும்போது அதை எதிர்த்து போராடுவது எதிர்க்கட்சிகளின் கடமை ஆர்ப்பாட்டமும் நடத்துவது எங்களது கடமை. முதலமைச்சர் சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது அரசாங்கத்தின் கடமை எங்கள் கடமை நாங்கள் செய்தோம் அரசு கடமையை அவர்கள் செய்தார்கள். இந்தியாவில் பல கட்சிகள் இருந்தாலும் பிஜேபி எதிராக அதில் காங்கிரஸ் கட்சி தான் நேரடியாக சிம்ம சொப்பனமாக இருப்பது ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மு க ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர் காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைப்பது கூட்டணிக்கு உதவாது என என கூறி வருகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் இணைந்து போட்டியிட முடியாத கட்சிகளாக இருக்கலாம். ஆனாலும் அந்த கட்சிகளும் பிஜேபி எதிர்க்க கட்சிகள் தான். ஒரு மாநிலத்தில் தேர்வு நடக்கும் போது அந்த மாநில மொழியில் தேர்வு எழுதக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போது அந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். மாநிலத்திற்கு வரும்போது அவரிடத்தில்மாநிலத்திற்கு தேவையானதை திறமையானவை கேட்டு பெறுவது தான் புத்திசாலித்தனம் எதிர்ப்பது தேவையற்றது.
சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றும் பொழுது சட்ட பிரச்சனை ஆராய்ந்து தான் அனுப்புவார்கள். ஆனால் ஆளுநர் முதல் கட்டத்திலேயே தடுத்து வைப்பது முறை அல்ல. ஆளுநர் மாநிலத்திற்கு துணையாய் இருக்க வேண்டும் தடையாக இருக்கக் கூடாது. திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவானது நிலையானது என தெரிவித்தார். இப்பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் ஜவகர், கவுன்சிலர் ரெக்ஸ் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.