காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை 24ம் டில்லியில் நடைபயணம் செய்கிறார்.இந்நிலையில் இன்று அரியானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியுடன் திமுக எம்பி கனிமொழி நடைபயணம் மேற்கொண்டார். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுலுக்கு மாற்றுதிறனாளி ஒருவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனைதொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை ராகுல்காந்தியின் நடைபயணத்தில்
பங்கேற்கிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள், மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் நடைபயணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து கமல்ஹாசன் இன்று இரவு டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற கமல்ஹாசன் விரும்புகிறார். இதற்கான அடித்தளமாகவே அவரது டெல்லி பயணம் பார்க்கப்படுகிறது. டில்லியில் ராகுலுடன் நடைபயணத்தில் ஒன்றாக செல்லும் அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.