இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ராகுல் காந்தி அவர்கள் பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்க தொகை மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கினர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜான் அசோக் வரதராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு
அழைப்பாளராக மாநில செயலாளர் தங்க.தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பம் & ஊடக பிரிவு மாநில செயலாளர் துரை.ராஜீவ்காந்தி செய்தார். இவ்விழாவில் மகிளா காங்கிரஸ் தலைவி பழனியம்மாள், வேப்பந்தட்டை நல்லுசாமி ,OBC மாவட்ட தலைவர் சாமிதுரை மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…