கோல்கட்டாவில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது.
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஓடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே சரக்கு ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 132-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த ரயில் போலீசார் மற்றும் மீட்பு படையினர், தடம் புரண்ட
பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு 50 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த நேரம் இரவு என்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்