குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் அக்கட்சி 156 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 77 தொகுதிகளை வெற்றி பெற்ற அக்கட்சி தற்போது 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில், இந்த தீர்க்கமான வெற்றிக்காக இமாச்சல பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி. அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்த வெற்றிக்கான வாழ்த்துக்களுக்குத் தகுதியானது. பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன். அதனை தொடர்ந்து குஜராத் மக்களின் தீர்ப்பை பணிவுடன் காங்கிரஸ் ஏற்று கொள்கிறது. கட்சியை மறுசீரமைப்பதுடன், நாட்டின் நலனுக்காகவும் , மாநில மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.