லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று( ஜூன் 1) நிறைவு பெற்றது. ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜூன் 4) வெளியாக உள்ளது. நேற்று, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடக அமைப்புகள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளிலும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. ‛இண்டியா ‘ கூட்டணி 144 இடங்களை பிடிக்கும் என தெரிவித்து உள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: இது கருத்துக்கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. ‛ இண்டியா ‘ கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.