பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட் இன்று 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிபதி எச்.எச்.வர்மா அறிவித்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகலில் ராகுல் காந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது முதல்வர், இந்த விவகாரத்தில் ராகுலுக்கு ஆதரவாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.