கோவையில் இன்று நிருபர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி… ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லி விட்டு சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் போதே வேட்பாளரின் சொத்து விவரமும் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வழக்கு தொடுக்கலாம். உண்மையிலேயே மக்களுக்கு பணியாற்ற விரும்புவார்கள் மக்களின் தேவைகளையும் கருத்துகளையும் முன் வைத்தால் அதற்கு அரசு செவி சாய்க்கும். அதே சமயம் பொய் குற்றச்சாட்டுகள் ஒருபோதும் எடுபடாது. கட்டி இருக்குற வாட்ச்சுக்கு பில் எங்கே? என கேட்டோம். அது நண்பர் வாங்கிக்கொடுத்தது என சொல்லியிருக்கலாம். சுமார் 6 மாதகாலமாக பில்லை தேடி அதை வாங்கிக்கொடுத்தாக ஒருவரை தேடி ஏன் இந்த நிலை. ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்யை சொல்லி மக்கள் ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டலாக கூறினார்.
