Skip to content
Home » கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

கோவை அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று கோவை அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி, சூலூர் வடக்கு ஒன்றிய அதிமுக மகளிர் அணி அவைத்தலைவர்   எஸ்.டி சௌந்தர்யா வெற்றி சந்தோஷ்   தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில்  தங்களை இணைத்துக் கொண்டனர்..  இந்த நிகழ்வில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர்  தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட திமுக  செயலாளர் தொ.அ.ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.