தமிழ்நாட்டில் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. தேர்வு 27ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு அக்டோபர் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை மிகவும் குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், காலாண்டு விடுமுறை தினத்தை அதிகரிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
இதனை ஏற்றுக்கொண்ட பள்ளிக் கல்வித்துறை காலாண்டு விடுமுறையை வரும் அக்டோபர் 6ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது. 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.