கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, ஒன்றிய அமைச்சர்கள் அல்லது வெளியுறவு அதிகாரிகள், நேரில் சென்று வரவேற்பது வாடிக்கை. ஆனால் தற்போது, பிரதமர் மோடி டில்லி விமான நிலையத்தில் நேரில் சென்று கத்தார் மன்னரை வரவேற்றுள்ளார்.
விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட கத்தார் மன்னரை ஆரத் தழுவி பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். தனது இரண்டு நாள் பயணத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கத்தார் மன்னார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.