அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே வரும் 9ம் தேதி இரவு முதல் டிசம்பர் 10ம் தேதி அதிகாலைக்குள் கரையை கடக்கும்என எதிர்பார்க்கிறோம். புயல் சின்னம் காரணமாக 11ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும். 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும். தற்போது புயல் சின்னம் சென்னைக்கு மேற்கு வடமேற்கில் 770 கி.மீ. தொலைவில் உள்ளது. அது மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகருகிறது.
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.