புதுக்கோட்டை, புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டப்பட்டது. கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் இரா.சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி முதல்வர் ஹேமாமாலினி சுவாமிநாதன் ஆகியோர்கள்
பங்கேற்று விழாவை துவக்கி வைத்தனர்.இதில் 26துறைகளை சார்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கலிட்டு அசத்தினர். பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடந்தது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.உதவிப்பேராசிரியர் கீதா நிகழ்ச்சியை இணைந்து ஒருங்கிணைத்தார்.நிறைவாக துணை முதல்வர் முனைவர் க.லெட்சுமி நன்றி கூறினார்.