தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழாவில், மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
—————————————————–
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தில் மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைத்து, 10
மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை (Debit Card) வழங்கினார். இவ்விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் சு. பொன்முடி, மாண்புமிரு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாண்புமிரு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், . ஏ. கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி. உதயகுமார், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., சமூக நலத் துறை இயக்குநர் திருமதி த. ரத்னா, இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.